அகத்தியர் சாகரம் – “ நெருப்பாறு மயிர்ப்பாலம் “
சிவயோக ஞானம்
தானென்ற முப்பாழில் மும்மலமும் நீக்கித்
தற்பரத்துக் கப்பால் மயிர்ப்பாலமீதில்
வானென்ற நெருப்பாறுக்கு அப்பாற்சென்று
மகத்தான பரவெளியில் மனதொடுங்கி
கோனென்ற வெளியொளியில் தானே தானாய்
குவிந்திருந்த சிவயோக ஞானந்தானாய்
ஊனென்ற வாதியந்தந் தானே தானாய்
உகந்திருப்பார் சிவஞான முணர்ந்தோர்காணே
விளக்கம் :
சுத்த ஜீவன் தன் நிலைக்கு அப்பால் , சுழிமுனை
நாடியில் சென்று – உச்சியில் வெளியில் ஆன்மாவில் எல்லாம் ஒடுங்கினால்
அது சிவயோகம் ஆம்
அந்த ஞானம் சிவ ஞானமும் ஆகும்
உச்சி அடையும் முன் அனுபவம் தான் நெருப்பாறு மயிர்ப்பாலம் அனுபவம்
மயிர்ப்பாலம் – சுழிமுனை நாடி
நெருப்பாறு – பரவிந்து கலைகள்
வெங்கடேஷ்