அகத்தியர் ஞானம் – சுழிமுனை உச்சி பெருமை
ஒளியது காணிரண்டுமொன்றாய்ச் சேருசேரு
வுற்றுப்பார்புருவத்தி லூணிப்பாரு
ஆரறியாதகாயமப்பா வனந்தவரைமாட்டும்
மந்திடந்தான் சகலசித்துக் காதிபீடம்
வெளிகாண சதாசிவந்தான் மின்னல் கோடி
வெளிச்சம் போல்கண் கூசம்பார்க்கப்போகா
வழிகாணமுத்திதனில் துவாதசந்தான்
மகாசொர்க்கமுத்தியுமா மஷ்ட்டசித்தே
விளக்கம் :
இரு கண்ணொளி ஒன்றாய்ச்சேரு
அங்கு – ஒன்று சேரும் அந்த இடத்தை உற்று உற்றுப்பார்ப்பாயாக
அதன் மூலம் மேல்வரை உச்சி நோக்குவாயாக
அண்ட உச்சி தான் சகலசித்துக்கும் மூலம் ஆகும்
அங்கு சதாசிவரை காணலாம்
வெட்ட வெளி திறந்தால் கோடி மின்னல் ஒளி போல் பிரகாசிக்கும்
காணக் காண கண் கூசும்
அது தான் துவாத சாந்தப்பெருவெளி ஆகுமே
அங்கு சொர்க்கம் அஷ்டமாசித்தி எல்லாம் கைவல்யம் ஆகுமே
வெங்கடேஷ்