“ பார்வை பெருமை  “

“ பார்வை பெருமை  “ உலகம் : இன்பம் என்றாலும் துன்பம் என்றாலும் எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கு ஞானம்  அடைதலும் பார்வையில் தான் இருக்கு வேறெதிலும் இல்லை காதல் மலர்வதும் பார்வையில் தான் தெளிவு வருவதும் பார்வையில் தான் வெங்கடேஷ்

அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம் அட்டசித்தாமெட்டெட்டுஞ் சித்தியாகுஞ் மடிமுடியாமிரண்டுக்கும் வழிதானீது விட்டெழுத்துதொட்டெழுத்தும்விடாதெழுத்தும் வேதாந்தசற்குரவை வணங்கிக்கேளு சட்டமிட்டவாதார மிம்மட்டமாச்சு சண்முகமாமாதாரக் கருவைக்கேளு திட்டமுடன் மனவுறுதி சின்மயத்தை வெல்லுந் திருச்சிற்றம்பலம்போற்ற ஞானமுற்றே பொருள் கருமசித்திகள் அஷ்டமா சித்திகளும் ,  யோக சித்தியாம் 64 சித்திகளும் கைவரப் பெறும் திருவடி காண , சுழிமுனை உச்சி கண்ணால் காண , அடியும் முடியும் ஆன இறைவனை காணும் வழி இது ஞானம் என்பது என்ன வேதாந்த நிலையில் இருக்கும் குருவை வணங்கி கேட்டுக்கொள்வாயாக  வேதாந்தம்…