“ வாலையும் சாகாக்கல்வியும் “
சித்தர் பெருமக்கள் : வாலை பெருமையாக
“ காலனை காலால் உதைத்தவளாம் வாலை “
இது எப்படி சாத்தியப்படுத்துவது எனில்?
சுவாசம் உண்டாகிக் கொண்டே இருப்பதால் தானே ??
அது வீணாகி நம் ஆயுள் உடல் கெடுது
அந்த சுவாசமே உண்டாகாமல் தடுத்துவிட்டால் ??
அதை செய்வது தான் வாலைத் தெய்வம் என்ற 10 வயது சிறுமி
எட்டிரெண்டு கூடிவிட்டால்
பிராணனுடன் அபானன் கூடிவிட்டால்
சுவாசம் உற்பத்தி இல்லை
சுவாசம் நாசமும் கிடையா
அதனால் ஆயுளும் குறையா
சாகாமலும் இருக்கலுமாகும்
இது பதிவாக எழுதுவது கடினம்
எழுத்தில் புரிய வைப்பது கடினம்
வித்தை விஷயம் அறிந்த ஒருவர் விளக்கினால் நன்கு விளங்கும் புரியும்
இந்த அற்புத வித்தை புரிய வைக்கத் தான் சித்தர் பெருமக்கள் :
வாலை படத்தின் கீழ்
“ ஒரு பாம்பு தன் வாலை தானே விழுங்குவது போல் காட்டி உணர்த்தியுள்ளனர் “
சித்தர் அறிவுக்கு ஈடிணையிலை
இதை ஒருவன் புரிந்து கொள்வானாகில் , அவன் சாகாக்கல்வி மரணமிலாப்பெரு வாழ்வு அடைவான்
வெங்கடேஷ்