“ ஔவைக்குறளும் சுத்த சன்மார்க்க சாதனமும் “
அவ்வைக் குறள் விளக்கம்
1. புருவத்திடை இருந்து புண்ணியனைக் காணில்
உருவற்று நிற்கும் உடம்பு
இங்கு புருவத்திடை என்பது – எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் புருவமத்தி அல்ல – கண்ணுக்கு மேல் இருக்கும் புருவத்தைக் குறிக்கின்றது –
அதன் மத்தியெனில் – கண்ணின் மணியைக் குறிக்கிறது – கண்மணி நடுவில் விளங்கும் திருவடிகளைக் குறிக்கிறது
அத்திருவடிகளில் மனதை வைத்து சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தால் – இம்மாதிரி சாதனம் செய்தால் – சாதகனுடைய உருவம் மறைந்து விடும்
அதாவது கண்ணாடி இருள் சூழ்ந்து கருப்பாக மாறி , உருவம் மறைந்து விடும்
அதாவது அமாவாசை மாதிரி ஆகிடும்
உண்மையிலும் தவத்தில் , அந்த அனுபவத்தில் , சந்திரனும் சூரியனும் ஒன்று சேர்வதால் , இந்த அமாவாசை அனுபவம் கண்ணாடி தவத்தில் கிடைக்கும்
இதைத் தான் மற்றுமொரு ஔவைக்குறள் :
14. கலை ஞானம் (131-140)
*****************************
131.சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்
முத்திக்கு மூல மது
முத்திக்கு மூலமான தவப்பயிற்சி : சூரியனும் சந்திரனும் ஒன்று கலப்பது தான்.
அதுவும் மூலத்தில்
மூலத்தில் என்றால் உலகம் நினைப்பது போல் முதுகுத் தண்டின் அடியில் அல்ல
உலகம் ஏமாத்திவிடும் – மிக்க கவனம் தேவை
வெங்கடேஷ்