“ திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை “
ஒரு கொடியில் இரு மலர்கள்
ஒரு குருவிடம் பயின்ற இரு மாணவர்
ஆனால் வெவ்வேறாக பயிற்சி அளிக்கின்றார்
அது தான் விந்தை
“ திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை “
இந்த பொக்கிஷத்தை பதிப்பித்தவர் திருச்சி சன்மார்க்க சங்கத்து சேர்ந்த இராமசாமி தேசிகர் ஆவார்
இவரிடம் பயின்ற மாணவர் தான்
1 சென்னை மீ ஞ்சூர் சேர்ந்த சுவாமி நித்தியானந்தா
2 குமரி சேர்ந்த தங்க சபை குரு
மூவரும் உயிருடன் இல்லை
முதலாமவர் கண்ணாடி தவம் கற்றுத்தருகிறார் – பயின்றார்
அவர் சபையில் மிகப்பெரிய நிலைக்கண்ணாடி இருக்கும்
அதுக்குத் தான் பூஜை நடக்கும்
வள்ளல் பெருமான் தன் 9 வயதில் சென்னை வீட்டு மேல் மாடியில் கண்ணாடி தவம் செய்தார் என வரலாற்று செய்திகள் உள
அதில் முருகன் காட்சி அளித்தார் என்பர்
ரெண்டாமவர் கண்ணாடி பயிற்சி அளிப்பதில்லை மாறாக – கண்ணில் திருவடி விளக்கம் அளிப்பதாக அவர் மாணாக்கர் கூறுகிறார்
என்ன வியப்பு எனில்
மீஞ்சூர் சங்கம் “ திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை “ நூலை பயன்படுத்தி விளக்கம் பயிற்சி அளிக்குது
ஆனால் குமரி சங்கம் இது பத்தி எந்த குறிப்பும் அளிப்பதிலை
எப்படி இது ??
ஆனால் ஒன்று மட்டும் உண்மை – “ திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை “ ஞானம் அடைய பெரும் உதவி செயும்
அதில் இருக்கும் விளக்கம் – அனுபவங்கள் இது வரை யாரும் வெளிப்படுத்தாதது
அது அனுபவ ஞான உரை நூல் ஆகும்
புரிந்து கொள்ள நீண்ட காலம் ஆகும்
நான் அந்த நூலைத்தான் கடந்த 20 ஆண்டுகாலமாக ஆய்வு செய்து வருகிறேன்
என் பயிற்சி அனுபவம் எல்லாமே அந்த நூல் அளித்தது தான்
இந்த நூல் வைத்து பயின்று , வரும் அனுபவத்தை நான் பதிவாக ஏற்ற , அதை படித்துவிட்டு , எங்கள் குருவும் இப்படி – இதைத் தான் கற்றுத்தந்தார் என பலர் அபிப்ராயம் செய்து – கற்கிறார்
மேல் நிலை கற்று செல்கிறார்
வெங்கடேஷ்
i would like to buy this book , where i will get it sir
LikeLike