” சித்தர் பாடல்களுக்கு விளக்கம் “  – 2

“ சித்தர் பாடல்களுக்கு விளக்கம் “  – 2

தவறாக விளக்கம் அளிப்பது எளிது

சரியாக அளிப்பது சற்று கடினம்

அதுக்கு அருளும் அவசியம்

திருமந்திரம் – குண்டலினி விளக்கம்

மூலத்திரு விரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ் நின்ற
கோலித்த குண்டலியுள் எழும் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால் விரல் கீழதே

உலகம் பொருள் /விளக்கம் அளிப்பது :

மூலாதாரம் ஆகிய குய்யம் /குதம் ( மல – ஜலம் ) கழிக்கும் இடத்தில் குண்டலினி

உறங்குது

உண்மை விளக்கம் :

மூலமாகிய புருவ இடையில் இருந்து 2 விரல்கடை மேலும் , ஞான யோனிக்கு 2 விரல்கடை கீழும், சிரசின் உச்சிக்கு நால் விரல்கடை அளவு கீழ் குண்டலினி இருக்கின்றது

யோனி என்பது உலகத்தவர்க்கு ஒன்றும் ஞானியர்க்கும் ஒன்றுமாக உள்ளது – சாமானியர் பெண் யோனி பயன்படுத்த , ஞானிகள் தங்களுக்குள் இருக்கும் ஞான யோனியை பயன்படுத்துகின்றனர்

அது பேரின்பத்தை தரக்கூடியது ஆம்

ஞான யோனியும் பேரின்ப யோனியும் ஒன்றே

இப்படித் தான்  உலகம் , தப்பு தப்பாக விளக்கம் அளித்து ஞானத்துக்கு வராமலே  

அதுக்குத் தான் சித்தர் ஞானப்பாக்களுக்கு சரியான பொருள் எடுக்க அருள் வேணும் என்பது

யார் யார் தப்பாக விளக்கம் அளிக்கிறாரோ ?? அவர்க்கு அருள் இலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s