“ சாதனம் அவசியம் பெருமை ”
வாயால் உரைக்க வார்த்தை இல்லா
அரும் பெரும் பொருள் ஒன்று வெளியில்
அதை அடையணுமெனில் ??
வாயால் உரைக்க முடியா துன்பம் துயர் அரும்பாடு பட்டால் தான் ஆகும்
அதை அடைந்தக்கால்
வாயால் உரைக்கவொண்ணா இன்ப அனுபவம் தான்
சுத்த சுகாதீதப் பெருவெளி அனுபவம்
பிரமாணம் :
அருட்பா – ஆறாம் திருமுறை – மெய்யருள் வியப்பு
- 78. அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே
அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையு மே
எறிந்தப் பாடு முழுதும் பெரிய இன்ப மாயிற் றே
எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்த மாயிற் றே.
எனக்கும் உனக்கும் - 79. பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே
துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற் றே
துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
எனக்கும் உனக்கும் - 80. ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே
ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே
இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
எனக்கும் உனக்கும்
இந்த பாடல் படித்தாலே போதும் தானே விளங்கும்
வெங்கடேஷ்