சிரிப்பு
வடிவேல் காமெடி நினைவுபடுத்தி இந்த பதிவு படித்தால் – புரியும்
வடிவேல் கூட்டாளி :
அண்ணே – எங்க குருஜி கிட்டக்க ஒரு ஆசிரமம் / யோகா சென்டர் ஆரம்பிச்சிருக்கார் – வந்து ஒரு பயிற்சி கத்துக்கிட்டு போங்க
வடிவேல் :
என்னடா புதுசா ?? நான் எதுக்கு வந்து கத்துக்கணும் ?
எனக்கு அவசியமிலை
வ கூட்டாளி :
ஆனா அவர்க்கு அவசியமாச்சே ??
நீங்க வந்து ஆரம்பிச்சீங்கன்னா , நல்லா வியாபாரம் ஆகும்
ஆமாண்ணே – நீங்க வந்து பயிற்சி கத்துக்கிட்டா , ரசமணி விலை 50% தள்ளுபடி
அப்படியே ஆகாஷிக் பேரேடுகள் பார்த்தீங்கன்னா – பயிற்சியில 50 % தள்ளுபடி
வடிவேல் :
என்னடா இதை வியாபாரம் ஆக்கிட்டீங்க ??
வ கூட்டாளி :
இப்ப எல்லாம் வியாபாரம் தான் அண்ணே
நீங்க ஒருத்தரை கூட்டி வந்தீங்கன்னா – 10 % கமிஷன்
5 பேர் = 50% கமிஷன்
10 பேரைக்கூட்டி வந்தீங்கன்னா – சிங்கப்பூர் மலேஷியா சுற்றுலா கூட்டி செல்வார் நம்ம குருஜி
நல்ல வேடிக்கை சிரிப்பு இலையா ??
வெங்கடேஷ்