ஆணிப்பொன்னம்பலக் காட்சி
ஆணிப்பொன்னம்பலக் காட்சி 1 . ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்அற்புதக் காட்சிய டி – அம்மாஅற்புதக் காட்சிய டி. கண்ணிகள் 2. ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒருவீதிஉண் டாச்சுத டி – அம்மாவீதிஉண் டாச்சுத டி. ஆணி 3. வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒருமேடை இருந்தத டி – அம்மாமேடை இருந்தத டி. ஆணி 4. மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொருகூடம் இருந்தத டி – அம்மாகூடம் இருந்தத டி. ஆணி 5. கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலைமாடம் இருந்தத டி – அம்மாமாடம்…