போகர் 7000
யோக ஞான சாதகரின் சொந்தபந்த வம்சம் பெறும் பேறு
தானாகச் சடமெடுத்துத் தன்மஞ் செய்தால்
தன்றனக்கே யல்லாமல் மற்றோர்க்கு இல்லை
ஊனான யோகத்தில் உற்று உணர்ந்தால்
“உற்றதொரு வமிசமெலாங் கடைத்தேறிப் போம்”
நாளாக ஞானத்தின் சொரூபம் உற்றால்
“நலமான பந்துஎல்லாம் கடைத்தே றிப்போம்”
வானாக க்குளிகையிட்டு ஆடித் தேர்ந்தால்
வந்த வரலாறு எல்லாம் தோற்றமாமே !
பொருள் :
ஒருவன் தான் பிறப்பு எடுத்து தர்மம் செய்தால் அது அவனுக்கு மட்டுமே சேரும்
ஆனால் தவம் செய்தானாகில் , அந்த புண்ணியம் அவன் வம்சம் – பந்துக்கள் சுற்றம் எலாம் கடைத்தேற வழி பிறக்கும்
நற்கதி அடைவர்
வெங்கடேஷ்