அன்பர் சந்தேகம்
உண்மை சம்பவம் கோவை மார்ச் 22
சென்ற வாரம்
நான் எதிர்ப்பார்த்த மாதிரியே சன்மார்க்க அன்பர் எதிர்ப்பு தெரிவித்தார்
அன்பர் அலைபேசியில் :
ஐயா உங்க பதிவு படிச்சிட்டு வர்றேன்
நல்ல விஷயம் தான்
ஆனால் , நீங்க சொல்ற மாதிரி சுத்த சன்மார்க்கம் என்பது சைவ சித்தாந்தத்தின் அடிப்படையாக கொண்டது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது
நான் :
ஏன் அது வானத்தில் இருந்து குதித்துவிட்டதா ??
ஐயா நீங்க ஆய்வு செய்து பார்க்கவும்
அப்போது உண்மை புரியும்
நீங்க சைவ சித்தாந்த நூல்கள் படிக்கவும்
அவர் : அதெல்லாம் படிக்கத் தேவையிலை – ஆறாம் திருமுறை மட்டும் படித்தால் போதும்
நான் : ஓ நீங்க அந்த வகை கரை தாண்டா முதலையா ?? இப்படித் தான் இருக்கார் மக்கள்
பின் எங்கே சன்மார்க்கம் வளர்ச்சி காண்பது
அவர்க்கு பின் மற்றவர் ஒளி தேகம் அடைவது ??
அவர் : வள்ளல் பெருமான் மாதிரிஅடைந்த பேறு இது வரை யாரும் அடைந்ததிலை
அவர் வெளிப்பட உரைத்தது மாதிரி யாரும் ரகசியம் உடைத்ததில்லை
நான் : நீங்க என்ன அகில இந்திய வள்ளலார் ரசிகர் மன்ற தலைவரா ??
இந்த மார்க்கத்து உண்மை ஆய்ந்து தெரிந்து கொள்ளாமலே இப்படி அவரை தலையில வச்சி கொண்டாட்றீங்களே ??
பின் ஏன் வள்ளல் பெருமான் திருமந்திரம் திருவாசகம் படிக்க சொன்னார் ??
அவர் : நீங்க விதண்டாவாதம் செய்கிறீர் ??
நான் : இல்லை – சரியாகத் தான் கேட்கிறேன்
பின் ஏன் ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிகளில் நடராஜர் – சிவகாமி அம்மை பாடினார் ??
அவர் : நடராஜர் சன்மார்க்க தெய்வமல்ல – அவர் வேறு
நான் : நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே ??
நீங்க சன்மார்க்க சங்க/ வள்ளலார் ரசிகர் மன்ற தலைவரா இருந்து அவர்க்கு பாலாபிஷேகம் செயத்தான் லாயக்கு
அவர்க்கு கோபம் வந்து அலைபேசி துண்டித்துவிட்டார்
வெங்கடேஷ்