“ ஜீவ சமாதி – பாதரசம் பெருமை “
உண்மைச் சம்பவம் – மார்ச் 2022
நான் என் குடும்பத்துடன் புதன் கிழமை ஈஷா தியானலிங்கம் சென்று வந்தேன்
அது மாலை நேரம்
தியான லிங்கம் கண்டு சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு வந்தேன்
திரும்பும் போது – என்ன வியப்பு??
மனம் அடங்கி இருந்தது – மனதில் ஒரு வித மௌனம் குடி இருந்தது
அது நீண்ட நேரம் 2 மணி நேரம் வரை நீடித்திருந்தது
இது அங்கு வைக்கப்பட்டிருக்கும் பாதரசத்தின் ஆற்றல்
இதே சக்தி ஆற்றல் வலிமை தான் ஜீவசமாதிக்கும்
அங்கு சென்று வந்தாலும் அந்த அனுபவம் கிட்டும்
இதே அனுபவம் எனக்கு ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனம் – கோவை சல்லிவன் தெரு – சென்று வந்தாலும் எனக்கு வரும்
அதனால் தான் வள்ளல் பெருமானார் ஜீவ சமாதிக்கு சென்று வரவும் என கூறுகிறார்
வெங்கடேஷ்