“ சுத்த சன்மார்க்கமும் – சைவ சித்தாந்தமும் – அருட்பா ஆறாம் திருமுறை – திருவடி பெருமை “
பூ ஒன்றே முப்பூ ஐம்பூ எழுபூ நவமாம்
பூ இருபத்தைஐம் பூவாய்ப் பூத்துமலர்ந திடவும்
நான் ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
நண்ணி விளங்குறவும் அதின் நற்பயன் மாத்திரையில்
மேவொன்றா இருப்ப அதின் நடுநின்று ஞான
வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச் சேவடியின்
பா ஒன்று பெருந்தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன்
பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி-
பொருள் :
பூ ஒன்றே – சுத்த சிவம் – அபெ ஜோதி
முப்பூ – இச்சா – கிரியா ஞான சத்திகள்
ஐம்பூ – 5 சிவ தத்துவங்கள்
எழு பூ – 7 வித்யா தத்துவங்கள்
நவமாம் பூ – சிவத்தின் ரூப அரூப ரூபாருவ நிலைகள் 9
25 பூவாய் – ஆன்ம தத்துவம் 24 + புருஷ தத்துவம் 1
சுத்த சிவம் தன் அருட் சத்தி கொண்டு இதெல்லாம் தோற்றுவித்தது
மேலும் இறையின் நடம் செயும் திருவடி இதிலெல்லாம் கலந்து விளங்குது
அதன் பெருமையை உரைப்பவர் யார் ??
சிறியனாகிய என்னால் முடியுமோ ?? என கேள்வி எழுப்புகிறார் வள்ளல் பெருமானார்
இந்த பாவுக்கு விளக்கம் பலப்பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்தேன்
சைவ சித்தாந்த நூல் படித்த பிறகு அதில் வரும் விளக்கம் ஆய்ந்ததில் , அருட்பாவுடன் ஒப்பிட்டுப்பார்த்ததில் , எனக்கு பொருள் விளங்கிற்று
ஆறாம் திருமுறைப்பாடல் , சைவ சித்தாந்தம் படித்தால் தான் புரிகிறது
இது ஆறாம் திருமுறை – முதல் ஐந்து திருமுறை அல்ல
ஆக சுத்த சன்மார்க்கம் என்பது சைவ சித்தாந்தத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகுது
நம் அன்பர் ( வாய் கொழுப்பு எடுத்து ) – முதல் ஐந்து திருமுறைகளையும் , சமய மதம் சார்ந்து எரித்து விட வேணும் என பேசுகிறார் வீடியோவில்
இது ஆறாம் திருமுறை – இது சைவ சித்தாந்தம் சார்ந்து இருப்பதால் , இதையும் எரித்து /ஒதுக்கி விடலாமா ??
மக்களுக்கு ஆழ்ந்த அறிவு ஆராய்ச்சியில்லை , கல்வி இல்லை – அதனால் விளக்கமிலை – இருளில் இருக்கார்
நம் அன்பர் திறந்த வெளி பல்கலையில் படித்தவர் – அதுக்குத் தான் எந்த அடிப்படைக்கல்வியும் தேவையுமிலை – இதெல்லாம் தேவையில்லாமலே முதுகலை படிப்பு முடித்துவிடலாம்
அப்படித்தான் இருக்கார் நம் மக்கள்
வெங்கடேஷ்
சரியாகச் சொன்னீர்கள், வெங்கடேஷ்.
LikeLiked by 1 person