“ சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும் – அருட்பா ஆறாம் திருமுறை – திருவடி பெருமை “
பூ ஒன்றே முப்பூ ஐம்பூ எழுபூ நவமாம்
பூ இருபத்தைஐம் பூவாய்ப் பூத்துமலர்ந திடவும்
நான் ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
நண்ணி விளங்குறவும் அதின் நற்பயன் மாத்திரையில்
மேவொன்றா இருப்ப அதின் நடுநின்று ஞான
வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச் சேவடியின்
பா ஒன்று பெருந்தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன்
பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி-
பொருள் :
இந்த பாவில் , எப்படி 36 தத்துவங்கள் தோற்றம் அடையுது என கூறுவது போல்
இந்த அருட்பாவானது எப்படி சப்த தாதுக்கள் உருவாகுது என விளக்கம் அளிக்குது
விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக்
கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே
கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும்
பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப்
பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம்
நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும்
நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி.
பொருள் :
அருள் வெளியில் முப்பூ ஆகிய சோம சூரியாக்கினிகள் விரிய – அதிலிருந்து ஒன்று ஒன்றாய் மலர்ந்து விரிந்து செல்ல செல்ல – இறுதியில் அது எழு பூ ஆகிய சப்த தாதுக்கள் ஆக – அது ஆணிடத்து மூன்றாகவும் பெண்ணிடத்தே நான்காகவும் பிரிந்தும் பிரியாத துமாய் விளங்கி அது கொண்டு உடல் – கருவி கரணங்கள் என வளர்ச்சி காணும்
இது எல்லாம் திருவடியின் அருள் செயல் என அதன் பெருமை போற்றுகிறார் வள்ளல் பெருமானார்
வெங்கடேஷ்