“ சிவவாக்கியர் – ஆன்மா பெருமை “

 “ சிவவாக்கியர் – ஆன்மா பெருமை “ தெய்வம் தெய்வம் என்று சொல்லி தேசதேசம் ஓடுவீர் தெய்வம் உள்ள மேலிருந்து திருஅரங்கம் காட்டுமே தெய்வம் அந்த தெய்வமே தெளிந்த ஞானம் கிட்டினால் தெய்வமேது அக்தலால் தெளிந்த ஞான பானுவே விளக்கம் : தெய்வம் தெய்வம் என உலகம் நாடு  நாடாக ஓடுகிறது ஆனால் ,  தெய்வம் என்றால் அரங்கமாகிய ஆன்மா விளங்கும் 1008இதழ்க்கமலம் தான் என தெளிந்த அறிவு கிட்டினால் விளங்கும் அதன்றி வேறிலையே வெங்கடேஷ்

“ அருட்பா –  கண்மணி பெருமை “

“ அருட்பா –  கண்மணி பெருமை “ என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம் என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம் பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் விளக்கம் : சிரசில் இருக்கும் இதயக்கமலாகிய 1008இதழ்க்கமலத்தில் விளங்கும் தெய்வம் என் இரு கண்மணியில் ஒளியாய் திருவடியாய் கலந்து விளங்கும் தெய்வம் தன் பொன்னடியாம் திருவடியை என் சிரசில் சூட்டிய தெய்வம் அதாவது பெருமானார் ,  திருவடியை மேல் நோக்கி செலுத்திய அனுபவம் உணர்த்தியவாறு   வெங்கடேஷ்

“ திருவாசகமும் –  திருவருட்பாவும் “

 “ திருவாசகமும் –  திருவருட்பாவும் “ திருவாசகம்  : போற்றி அகவல் – திருவாசகம் “பாரிடை ஐந்தாய்” பரந்தாய்ப் போற்றி” நீரிடை நான்காய் ” நிகழ்ந்தாய்ப் போற்றி” தீயிடை மூன்றாய்” திகழ்ந்தாய்ப் போற்றி” வளியிடை இரண்டாய்” மகிழ்ந்தாய்ப் போற்றி” வெளியிடை ஒன்றாய்” விளைந்தாய்ப் போற்றி இறைவன் எப்படி 5 பூதங்கள் வடிவாக நம்முடலில் கலந்து இருக்கின்றான் என்பதை இப்பாடல் விளக்குகின்றது “பாரிடை ஐந்தாய்” = மண் – 5 பாகங்களாக – மெய் , வாய், கண்…