“ திருவாசகமும் – திருவருட்பாவும் “
திருவாசகம் :
போற்றி அகவல் – திருவாசகம்
“பாரிடை ஐந்தாய்” பரந்தாய்ப் போற்றி
” நீரிடை நான்காய் ” நிகழ்ந்தாய்ப் போற்றி
” தீயிடை மூன்றாய்” திகழ்ந்தாய்ப் போற்றி
” வளியிடை இரண்டாய்” மகிழ்ந்தாய்ப் போற்றி
” வெளியிடை ஒன்றாய்” விளைந்தாய்ப் போற்றி
இறைவன் எப்படி 5 பூதங்கள் வடிவாக நம்முடலில் கலந்து இருக்கின்றான் என்பதை இப்பாடல் விளக்குகின்றது
“பாரிடை ஐந்தாய்” = மண் – 5 பாகங்களாக – மெய் , வாய், கண் , மூக்கு , செவி ஆகிய பாகங்களாக
” நீரிடை நான்காய் ” = நீர் = 4 பாகங்கள் – கண்ணீர் , சிறு நீர் , ரத்தம் , அமுதம் ஆகிய பாகங்களாக
” தீயிடை மூன்றாய்” = 3 பாகங்கள் – சூரியன் – சந்திரன் – அக்கினி ஆகிய பாகங்களாக
” வளியிடை இரண்டாய்” = 2 பாகங்கள் – பிராணன் – அபானன் ஆகிய பாகங்களாக
” வெளியிடை ஒன்றாய்” = 1 பாகம் – சிதாகாஸப் பெருவெளியாக
இவ்வாறெல்லாம் இறைவன் நம்முடலில் கலந்து அருள் செய்த வண்ணம் உள்ளான்
திருவருட்பா :
அருட்பா ஆறாம் திருமுறை – திருவடி பெருமை “
பூ ஒன்றே முப்பூ ஐம்பூ எழுபூ நவமாம்
பூ இருபத்தைஐம் பூவாய்ப் பூத்துமலர்ந திடவும்
நான் ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
நண்ணி விளங்குறவும் அதின் நற்பயன் மாத்திரையில்
மேவொன்றா இருப்ப அதின் நடுநின்று ஞான
வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச் சேவடியின்
பா ஒன்று பெருந்தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன்
பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி-
பொருள் :
பூ ஒன்றே – சுத்த சிவம் – அபெ ஜோதி
முப்பூ – இச்சா – கிரியா ஞான சத்திகள்
ஐம்பூ – 5 சிவ தத்துவங்கள்
எழு பூ – 7 வித்யா தத்துவங்கள்
நவமாம் பூ – சிவத்தின் ரூப அரூப ரூபாருவ நிலைகள் 9
25 பூவாய் – ஆன்ம தத்துவம் 24 + புருஷ தத்துவம் 1
சுத்த சிவம் தன் அருட் சத்தி கொண்டு இதெல்லாம் தோற்றுவித்தது
மேலும் இறையின் நடம் செயும் திருவடி இதிலெல்லாம் கலந்து விளங்குது
எப்படி ஒற்றுமை ??
வெங்கடேஷ்