தெளிவு

 தெளிவு மகுடி வைத்து ஊது ஊது என ஊதினால் ஒரு வேளை பாம்பு படம் எடுத்து ஆடக்கூடும் ஆனால் உலகம் ஊது ஊது என ஊதினாலும் வாசி பாம்பு எழுந்து ஆட மாட்டேன் என்கிறது என்ன செய்ய ?? தவறு எங்கே ?? விரித்துரைக்க வேணும் வித்தை  தெரிந்தோரே வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு பைத்தியம் பைத்தியமாக இருக்கின்ற வரையில் பைத்தியக்கார மருத்துவமனையில் இருக்கக்கூடும் அது தெளிந்த பின் பைத்தியத்துக்கு அந்த மருத்துவமனையில் வேலை இலை போல் ஆன்ம ஞானம் பெற்ற பின் ஞானியர்க்கு இந்த உலகில் என்ன வேலை ?? அவர் இருப்பிடம் வேறு வெங்கடேஷ்

சிவஞான போதம்

சிவஞான போதம் வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினைதீரின் அன்றி விளையா—வினைதீர ஞானத்தை நாடித் தொழவே அதுநிகழும் ஆனத்தால் அன்பின் தொழு. பொருள் : வினையால் அசத்தாகிய மாயை தோன்றும் ஞானம் எப்போது உதிக்கும் எனில் ?? வினை முற்றும் அழிந்தால் தான் நாம் ஞானத்தை  நாடினால் ஆன்ம  ஞானம் உதிக்கும் அதை வேண்டுவாயாக வெங்கடேஷ்