அருள் அனுபவம் 7
உண்மைச் சம்பவம் – 2022 ஏப்ரல்
என் பாதம் மென்மையாக மாறி இருக்கு
இது மாதிரி இருந்ததிலை
எப்போதும் வறண்டு சொர சொர என எண்ணெய்ப் பசை இலாமல் இருக்கும்
நான் தான் பசை தடவுவேன்
எப்படி என யோசித்துக்கொண்டிருந்தேன்
ஒரு வாரம் முன்பு என் மனைவியின் பாதத்துக்கு மருந்து தடவும் போது கவனித்ததில் அவளின் பாதமும் மென்மை அடைந்திருந்தது
நான் முடிவுக்கு வந்தேன்
தவத்தால் உடல் மாற்றம் காணுது – அருள் வேலை செயுது – உடல் பஞ்சு போல் மென்மை ஆகுது
இது தான் தவம் சரியான திசையில் பயணிக்குது என்பதுக்கு அறிகுறி
உடல் மாற்றம் தான் ஒரு ஆன்ம சாதகனுக்கு வேணும்
இது என் வாழ்க்கை – பிறவியில் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் முன்னேற்றம் – தவத்தின் பயன்
பெரிய அனுபவங்கள் முதலில் மனைவிக்கு காட்டும் – பின் தான் சாதகன் மேல் காட்டும்
அது தான் முதலில் என் மனைவி பாதம் மென்மை ஆகி – பின் என் பாதம் ஆகியிருக்கு
திருவிளையாடற் புராணம் :
செண்பகப்பாண்டியன் மனைவி கூந்தல் வாசம் கண்ட பின் தான் அரசனுக்கு உடல் மணம் கண்டது
வெங்கடேஷ்