வள்ளல் பெருமான் செய்த தவம் – ஆதாரம் “ – 2
இந்த பதிவு திரு கமலக்கண்ணன் ஐயா , 85 வயது சன்மார்க்க பெரியார் எழுதிய “ இறை அருளாளர் வள்ளலார் வாழ்வும் வாக்கும் “ என்ற நூல் தரும் செய்தி அடிப்படையாக்க் கொண்டு எழுதப்பட்டுள்ளது
நம் சன் அன்பர் :
ஜீவகாருண்ணியமே மோட்ச வீட்டின் திறவு கோல் –
அன்னதானம் / இன்ன பிற கிரியைகள் தான் சன்மார்க்கமே அல்லாது தவம் சாதனம் இல்லை என கூறி வருகின்றார்
அவர் தவம் செய்யவே இல்லை என உறுதியாக உள்ளார்
இதை ஆதாரத்துடன் மறுப்பது தான் இந்த பதிவு
ஆனாலும் இதையும் ஏற்க மாட்டார்
அவ்ளோ கர்மா பதிவு
விலக மாட்டேங்குது –அருள் நோக்கி செல்ல
வள்ளல் பெருமான் அடிக்கடி மறைந்து சென்றுவிடுவார் என்றும் , அவர் மலைக்குகையில் தவம் செய்ய சென்றுவிடுவதாகவும் மக்கள் நம்பினர்
ஆனால் அது உண்மை அல்ல
அவர் அங்கு தன் சீடர்களுக்கு ஞானோபதேசம் அளித்து , அவர் பயிற்சி செய்து வந்துள்ளனர் என்பது தான் உண்மை
1 வேட்டவலம் ஜமீந்தார் மலைக்கோயில் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார் உட்பட 5 பேர்க்கு ஞானோபதேசம் செய்தார் என்றும் , அவர் அங்கு குகையில் தவம் செய்து வந்திருக்கிறார்கள்
2 ரெண்டாவது இடம்
13.9.2009 தினத்தந்தி நாளிதழில் வெளி வந்த செய்தி
தொல்பொருள் ஆய்வறிக்கை ஒன்று வெளியானது
அதை கொண்டு ஆய்ந்ததில் கிடைத்த தகவல்
கடலூர் பண்ருட்டிக்கு அருகே 12 கி மீ தொலைவில் , சென்னப்ப நாயக்கன் பாளையம் , தற்போது உச்சி பிள்ளையார் கோயில் மலைக்கோவில் , மலை ஆண்டவர் கோவில் என்று வழங்கி வருது
இக்கோவிலில் அம்மன் சன்னிதியில் ஒரு வெண்கலச்சிலை இருக்கிறது
அதை மக்கள் புத்தர் /சமண தீர்த்தங்கரர் சிலை என கருதினர்
ஆய்வு செய்த போது , வடமொழி கண்டறியப்பட்டது
அது வள்ளல் பெருமான் சிலை தான் என கண்டறியப்பட்ட்து
வட மொழி வாசகம் :
“ ஸ்ரீ மத புஷ்பாசல ஸ்ரீ நிவாச ஸ்ரீ கிருபா பிரகாச பிதான்ய பரம மூர்த்தி “ என அந்த வாசகம் இருந்த்து
இதன் தமிழாக்கம் :
“ புஷ்பாசலம் மலையில் வாழ்ந்த அருட்பிரகாச வள்ளலாரின் திருவுருவம் “ என்பதாகும்
சிலை விவரம் :
48 செ மீ உயரம்
29 செ மீ அகலம்
60 செ மீ சுற்றளவு
இடது கால் மீது வலக்கால் மடித்து வைத்தும் ,
இடது கை மீது வலக்கை மூடி வைத்தும் , “ தியான நிலையில் அரைக்கண் பார்வையில் “ கருணை ததும்பும் முகத்தோடு காணப்பட்டது
“ இந்த முறையில் தவம் செய்வது தான் சரியான முறை – உலகளாவியதும் கூட “
நம் சன்மார்க்க அன்பர் = தவம் கிடையவே கிடையாது
தயவு ஜீவகாருண்ணியம் தான் உபாயம்
என் செய்வது ??
வள்ளல் பெருமானிடம் ஞானோபதேசம் பெற்று சுமார் 27 சீடர்கள் இருந்துள்ளனர்
அவர்களில் 4 மகளிர்
அவர் தம் சமாதிகள் அங்கு காணப்படுகின்றன
வள்ளல் பெருமானுக்கு மொத்தம் 32 சீடர்கள்
1 தொழுவூர் வேலாயுத முதலியார்
2 கல்பட்டு ஐயா தவிர்த்து
இந்த செய்தி அனைத்தையும் படம் மூலம் இங்கு ஒட்டப்பட்டுள்ளது
அன்னதானம் மட்டும் செயும் அன்பர்களே தெளிந்து விழிப்படையவும்
வெங்கடேஷ்
இதை நிரூபிக்கும் வகையில் , ஓர் சன்மார்க்க அன்பர் – ஆப்பிரிக்க நாடு ஆகிய உகாண்டாவில் வசிப்பவர் , அனுப்பிய பதில் :
” உண்மைதான் ,கடலூர் மாவட்டம் பணருட்டி அருகே உள்ளது செண்ணப்பநாயக்கன் பாளயம்.
இங்கு பஷ்பகிரி மலையாண்டவர் கோயில் உள்ளது, இக்கோயிலில் மேற்குறிப்பிட்ட வள்ளலாரின் அமர்ந்த நிலை வெண்கல சிலை ஒன்று இருக்கிறது.அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கோவிலுக்கு வழங்கியதாக செய்தி் அந்த கோவிலில் மூலவருக்கு கீழே ஒரு குகை உள்ளது
அதில் 4 ஜீவ சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.ஒரு சில காரணங்களால் அதை மேற்கொண்டு ஆராயாமல் பயந்து ஒதுங்கிவிட்டார்கள்.
நானும் என் மனைவியும் அங்கு தியானம் செய்யும்போது எனக்கு 4 பேர் காட்சி தந்தார்கள்
அவர்களில் ஒருவர் குரு போன்று இருந்தார் மற்றவர்கள் சீடர் போன்று இருந்தார்கள்.
என் மனைவிக்கு வேறொரு அனுபவம்.
மலைக்கு கீழே ஒரு சிறிய வள்ளலார் கோவில் உள்ளது. “”
தவத்தில் கிடைத்த அற்புத அனுபவம்
சன்மார்க்கத்தில் தவமா ?? என பேசும் மக்களுக்கு ஓர் நல்ல பதில்
சுருக்கென குத்தும் பதில்