மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி..
காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேர்க்கப்படும் விதைகளையே மூங்கில் அரிசி என்று அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு நெல் போலவே இருக்கும். இந்த மூங்கில் அரிசியானது நமது உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. மூங்கில் அரிசியின் பயன்கள் என்ன அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
இயற்கை அங்காடி
என்ன என்ன சத்துகள் மூங்கில் அரிசியில் உள்ளன
காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமான உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று.
மூங்கிலரிசியைச் சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் திடம் பெரும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது.
சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.மக்கட்பேறு உருவாக்குவதில் கூட முக்கிய பங்கு வகிக்கிறது.பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் மக்கட்பேறு இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் இதற்கு மூங்கில்அரிசியும் ஒரு காரணம் .
மூட்டுவலியை குணமாக்கும் மூங்கில் அரிசி கஞ்சி
பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது; முட்டி வலிக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடை பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். மறந்துபோன அந்த மருத்துவ உணவு.
மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது.
உடல் வலிமை பெறும்.
சர்க்கரை அளவை குறைக்கும்.
எலும்பை உறுதியாக்கும்.
நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.
1. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகி போனவர்களை, மாறும்படியும் சீரான உடல் அமைப்பை பெற செய்யும் இந்த மூங்கில் அரிசி.
மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிரிசி ஆகியவரை 100 கிராம் எடுத்து அரைத்து மாவுபோல் செத்து கொள்ளவும். இந்த மாவில் இருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து கஞ்சிபோல் செய்து தினமும் குடித்து வர. உடல் வலிமையடையும், சக்கரையை நோயை கட்டுப்படுத்தும்.
2. இந்த மூங்கில் அரிசியில் தினமும் கஞ்சி வைத்து சாப்பிட்டு வர மூட்டு வலி, முட்டியில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும்.
3. உடல் எடை குறைய, தொப்பை குறைய மூங்கில் அரிசியை வாரத்தில் இரண்டு முறை பொங்கலாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிது. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
3. குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூங்கில் அரிசியை தினமும் காலையில் கஞ்சியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இந்த குழந்தையினமை பிரச்சனை சரியாகும்.
இந்த மூங்கில் அரிசியில் செய்த கஞ்சியை சாப்பிடுவதால் பசியை குறைக்கும், உடலில் ஆற்றலை பெருக்கும்.
4 . இந்த மூங்கில் அரிசியானது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை உடையது. அதனால் கர்ப்ப கால பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிடலாம்.
5.உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் சக்தி மூங்கில் அரிசிக்கு உள்ளது. இந்த மூங்கில் அரிசியினை சாப்பிட்டு வந்தால் கழுத்து வலி, இடுப்பு வலி, போன்றவை சரியாகும். அதுமட்டும் இல்லாமல் உடல் வலிமை அடையும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும், நரம்புத் தளர்ச்சியை சரி செய்யும்.
மூங்கில் அரிசியில் கஞ்சி செய்யும் முறை: moongil rice benefits in tamil
தேவையான பொருட்கள்:-
மூங்கில் அரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – ¼ கப்
பிரியாணி இலை – 4
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – காரத்திற்கு ஏற்ப
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
புதினா – சிறிது
கொத்தமல்லி – சிறிது
சிறிய வெங்காயம் – 10
உப்பு – தேவைக்கு
முந்திரிப் பருப்பு – சிறிது
ஏலக்காய் – 2
தேங்காய் பால் – 1 கப்
மூங்கில் அரிசியையும், பாசிப் பருப்பையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின் குக்கர் அல்லது மண் பாத்திரத்தில் தேங்காய் பால் தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, நீரில் ஊற வைத்த அரிசி, பருப்பையும் போட்டு, தேவையான அளவு நீருடன், கஞ்சியாகக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். அடுப்பில் இருந்து இறக்கியபின், தேங்காய் பாலைச் சேர்த்து குடிக்கலாம்.