சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரப்பாடல் 8

சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரப்பாடல் 8 6 ம் திருமுறை: நஞ்சுண்டு உயிர்களைக் காத்தவனே நடநாயகனே பஞ்சுண்ட சிற்றடிப் பாவை பங்கா நம் பராபரனே மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா பிஞ்சுண்ட வாய்க்குப் பழம் அளித் தாண்ட பெரியவனே தனிதிருஅலங்கல் வெங்கடேஷ்

சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரபாடல் 7

சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரபாடல் 7 6ம் திருமுறை : வான்வந்த தேவர்களும் மால்அயனும் மற்றவரும் தான்வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் – தேன்வந்த மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான் இங்குநடஞ் செய்வான் இனி-இராமலிங்கனார் சுத்தசிவநிலை

சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரப்பாடல் 6

சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரப்பாடல் 6 (6 ம் திருமுறை) தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண் தனிமுதல் பேரருட்சோதிப் பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய் பராபர நிராமய நிமல உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர் உளத்ததி சயித்திட எனக்கே வரந்தரு னகின்றாய் வள்ளல் நின் கருணை மாகடற்கெல்லை கண்டிலனே தனிதிருஅலங்கல்

சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரபாடல் 5

சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரபாடல் 5: (6ம் திருமுறை) திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம் செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய் அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே சிவதரிசனம் வெங்கடேஷ்

சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரப் பாடல் 4

சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரபாடல்4: மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து எல்லையில் இன்பந்தரவும் நல்ல சமயந்தானிது இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது வருவாரழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே. வருவார் அழைத்துவாடி வெங்கடேஷ்

சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதார பாடல் 3

சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதார பாடல் 3: அண்ட அப்பா பகிரண்ட அப்பா நஞ்சணிந்த மணிகண்ட அப்பாமுற்றும் கண்ட அப்பா சிவகாமி எனும் ஒண்தவப் பாவையைக் கொண்ட அப்பா சடை ஓங்கு பிறைத் துண்ட அப்பா மறைவிண்ட அப்பா எனைச் சூழ்ந்தருளே- தனிதிரு அலங்கல் வெங்கடேஷ்

சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரப் பாடல் 2

இந்த பதிவு ஏன் அவசியமாகுது எனில் ?? நம் சன் அன்பர் அபெஜோதி வேறு சிவம் – நடராஜர் வேறு என உளறி வைப்பதால் சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதார பாடல் 2 நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித் தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் – தேன்புனைந்த சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த நல்லான்தன் தாட்கே நயந்து பாமாலை ஏற்றல் வெங்கடேஷ்

சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் – ஆதாரம் 1

இந்த பதிவு ஏன் அவசியமாகுது எனில் ?? நம் சன் அன்பர் அபெஜோதி வேறு சிவம் – நடராஜர் வேறு என உளறி வைப்பதால் சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரம் பாடல் 1: பதிஉடையார் கனகசபாபதி எனும் பேர் உடையார் பணம்பரித்த வரையர் என்னை மணம்புரிந்த கணவர் விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த மதிஉடையார் தமக்கருளும் வண்கை பெரிதுடையார் மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல் நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும் எட்டா தென்றால்…

“ ஒளி தேகம் பெருமை “

“ ஒளி தேகம் பெருமை “ ஸ்தூல பௌதீக உடல் நம் தாய் தந்தையர் அளிப்பது ஆனால் ஒளி தேகமாம் சுத்த பிரணவ ஞான தேகம் சாகாக்கலானுபவ தேகங்கள் யாவும் பெற்றோர் – தாய் தந்தையர் அளிக்க இயலாது நாமே தவத்தால் தயவால் அருளால் அடைவது ஆம் வெங்கடேஷ்