சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரபாடல் 5:
(6ம் திருமுறை)
திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே
சிவதரிசனம்
வெங்கடேஷ்