சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரப்பாடல் 6
(6 ம் திருமுறை) தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண்
தனிமுதல் பேரருட்சோதிப்
பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய்
பராபர நிராமய நிமல
உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர்
உளத்ததி சயித்திட எனக்கே
வரந்தரு னகின்றாய் வள்ளல் நின் கருணை
மாகடற்கெல்லை கண்டிலனே
தனிதிருஅலங்கல்