ஞானியர் உலக மயம்
1 காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
தடுக்குமே கோடான கோடிசக்தி
தான் வந்து போராடி மாளுமாளும்
அடுக்குமே பின்னாலே அதுவும்வந்தே
அய்யய்யோ எத்தனையோ எண்ணவுண்டோ??
விடுக்குமே வாசல்வழி தடைகள் தானே
மேலேற வொட்டாது ஒளிவிற்சிக்கும்
கொடுக்குமோ முத்தியென்ற திரிகாலத்தை
கூறாது தடுத்துவிடும் மேலேற
பொருள் :
ஆன்ம சாதகன் தன் தவத்தில் மேலேற எத்தனிக்கும் போது , தடைகள் எப்படி என்ன இருக்கும் என விவரிக்கிறார் சித்தர்
கோடான கோடி சக்திகள் வந்து ஆசை காட்டி , மயக்கி , தவத்தில் இருந்து சறுக்க முயற்சி செய்வார்
தவத்தை கலைக்க பார்ப்பார்
எல்லா ஞானிகளும் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்
2
வள்ளல் பெருமான் – 6ம் திருமுறை
ஆணிப்பொன்னம்பலக் காட்சி
1. ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சிய டி – அம்மா
அற்புதக் காட்சிய டி.
கண்ணிகள்
- 2. ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
வீதிஉண் டாச்சுத டி – அம்மா
வீதிஉண் டாச்சுத டி. ஆணி - 3. வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு
மேடை இருந்தத டி – அம்மா
மேடை இருந்தத டி. ஆணி - 4. மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
கூடம் இருந்தத டி – அம்மா
கூடம் இருந்தத டி. ஆணி - 5. கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
மாடம் இருந்தத டி – அம்மா
மாடம் இருந்தத டி. ஆணி - 6. ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
என்னென்று சொல்வன டி – அம்மா
என்னென்று சொல்வன டி. ஆணி - 7. ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
சீர்நீலம் ஆச்சுத டி – அம்மா
சீர்நீலம் ஆச்சுத டி. ஆணி - 8. பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
பவளம தாச்சுத டி – அம்மா
பவளம தாச்சுத டி. ஆணி - 9. மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
மாணிக்கம் ஆச்சுத டி – அம்மா
மாணிக்கம் ஆச்சுத டி. ஆணி - 10. பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
பேர்மணி ஆச்சுத டி – அம்மா
பேர்மணி ஆச்சுத டி. ஆணி - 11. வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
வெண்மணி ஆச்சுத டி – அம்மா
வெண்மணி ஆச்சுத டி. ஆணி - 12. புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி
பொன்மணி ஆச்சுத டி – அம்மா
பொன்மணி ஆச்சுத டி. ஆணி - 13. பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம்
படிகம தாச்சுத டி – அம்மா
படிகம தாச்சுத டி. ஆணி - 14. ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
இசைந்தபொற் றம்பம டி – அம்மா
இசைந்தபொற் றம்பம டி. ஆணி - 15. பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட
புதுமைஎன் சொல்வன டி – அம்மா
புதுமைஎன் சொல்வன டி. ஆணி - 16. ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல
என்னள வல்லவ டி – அம்மா
என்னள வல்லவ டி. ஆணி - 17. ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம்
ஆகவந் தார்கள டி – அம்மா
ஆகவந் தார்கள டி. ஆணி - 18. வந்து மயக்க மயங்காமல் நான்அருள்
வல்லபம் பெற்றன டி – அம்மா
வல்லபம் பெற்றன டி. ஆணி - 19. வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி
மணிமுடி கண்டேன டி – அம்மா
மணிமுடி கண்டேன டி. ஆணி
வெங்கடேஷ்