ஆலயம் பெருமை
அணு ஆராய்ச்சிக்கூடத்தில் ‘அணு விஞ்ஞானிகளைத் தவிர வேறு யாரும் உள்ளே நுழையக்கூடாது’ என்ற அறிவிப்பை ஒப்புக் கொள்கிற நாம், கோயில் விஷயத்தில் ஒப்புக் கொள்வதில்லை! கோயிலுக்கு என்று ஒரு தனி விஞ்ஞானம் இருப்பது நமக்குத் தெரிவதில்லை! கோயில்களும் தீர்த்தாடன மையங்களும் குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டுமே ஆனவை! ஒரு நோயாளியைச் சுற்றி, மருத்துவர்கள் நின்று கொண்டு, அவனுடைய நோயைப் பற்றி விவாதிக்கிறார்கள். அது நோயாளியின் காதில் விழுகிறது. ஆனால் விளங்குவதில்லை. கிரேக்க, லத்தீன் கலைச் சொற்கள் கொண்டு…