அணு ஆராய்ச்சிக்கூடத்தில் ‘அணு விஞ்ஞானிகளைத் தவிர வேறு யாரும் உள்ளே நுழையக்கூடாது’ என்ற அறிவிப்பை ஒப்புக் கொள்கிற நாம், கோயில் விஷயத்தில் ஒப்புக் கொள்வதில்லை!
கோயிலுக்கு என்று ஒரு தனி விஞ்ஞானம் இருப்பது நமக்குத் தெரிவதில்லை!
கோயில்களும் தீர்த்தாடன மையங்களும் குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டுமே ஆனவை!
ஒரு நோயாளியைச் சுற்றி, மருத்துவர்கள் நின்று கொண்டு, அவனுடைய நோயைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
அது நோயாளியின் காதில் விழுகிறது.
ஆனால் விளங்குவதில்லை.
கிரேக்க, லத்தீன் கலைச் சொற்கள் கொண்டு அவர்கள் பேசுவதால் புரிவதில்லை.
இதேபோல, ஒவ்வொரு மதமும் தமக்கேயான குறியீட்டு மொழியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அதனால், நாம் நினைத்திருக்கிற இடங்கள் மெய்யானவை அல்ல;
தவறானவர்கள் கைகளுக்குப் போய் விடக்கூடாது என்றும், தவறாகப் பயன்பட்டு விடக்கூடாது என்றும் அவற்றைப் பாதுகாத்து வந்திருக்கிறது மாபெரும் மரபு.
பொதுமக்களுக்கு அவற்றால் சிரமங்களே தவிர எந்தப் பயனும் இல்லை.
‘அல்குஃபா’ ஊருக்குள் நுழைந்தால் பைத்தியம் பிடித்துவிடும்!
எதிர்பாராமல் நுழைகிறவரும் பைத்தியம் பிடித்தே வெளியே வருவார்!
‘அல்குஃபா’வில் உருவாகும் சக்தி அலை அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளும் சக்தி, சாதாரண மனிதர்களுக்கு இல்லாமற்போவதுதான் அதற்குக் காரணம்.
ஆனால், சரியான முன் தயாரிப்பும், கட்டுப்பாடும் இல்லாமல், அதற்குள் நுழையாமல் இருப்பதே நல்லது.
‘அல்குஃபா’வின் சில அம்சங்களைப் புரிந்து கொண்டால், நமது தீர்த்த யாத்திரைத் தலங்களைப் புரிந்து கொள்வது எளிது.
‘அல்குஃபா’வில் உறங்க முடியாது என்று சொல்கிறார்கள்!
அதனால், விழித்திருக்கும் அனுபவம் இல்லாதவர்கள் அங்கே பைத்தியமாகி விடுகிறார்கள்!
இரவில் விழித்திருப்பதுதான் சூஃபி ஞானிகளின் மாபெரும் ஆற்றல்.
இரவு முழுவதும் விழித்திருக்க அவர்களால் முடியும்.
ஒருவர் தொண்ணூறு நாட்கள் உண்ணாமல் இருந்தால் மிக மிகப் பலவீனமாகிவிடுவார்.
ஆனால், செத்துவிட மாட்டார்; பைத்தியமும் பிடிக்காது.
சாதாரண ஆரோக்கிய மனிதர்கள் தொண்ணூறு நாட்கள் உண்ணா நோன்பை எளிதில் மேற்கொள்ள முடியும்.
ஆனால், இருபத்தோரு நாட்கள் உறங்காமல் இருக்க முடியாது!
மூன்று மாதம் உண்ணாமல் இருக்க முடிந்தாலும் மூன்று வாரம் உறங்காமலிருக்க முடியாது.
மூன்று வாரம் என்பது கூட அதிகம்தான்.
ஒரு வாரமே சிரமம்.
ஆனால், ‘அல்குஃபா’வில் உறக்கமே சாத்தியமில்லை!