“ திருமணம் – சன்மார்க்க விளக்கம் “
ஆறாம் திருமுறை – அனுபவ மாலை
கற்பூரம் மணக்கின்றது என்னுடம்பு முழுதும்
கணவர் திருமேனியிலே கலந்த மணம் அதுதான்
இற்பூத மணம் போலே மறைவதன்று கண்டாய்
இயற்கை மணம் துரிய நிறை இறைவடிவத்துளதே
பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகவர்
புண்ணியனார் திருவடிவில் நண்ணியவாறு அதுவே
நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே
அதாவது ஆன்மா ஆகிய புருஷன் கணவர் நம் உடலில் கலந்தால் , நம் தேகமெங்கும் கற்பூர மணம் வீசும்
அது தான் உண்மையான திருமணம் – ஆன்மாவின் மணம்
ஆன்மாவின் மணம் நம் உடலில் வீசுவது தான் திருமணம்
நம் சடங்கு திருமணம் அல்ல – அதன் புற வெளிப்பாடு ஒத்திகை
வெங்கடேஷ்