திரு மந்திரம்
ஈர்ஆறு கால்கொண்டுஎழுந்த புரவியைப்
பேராமல் கட்டிப் பெரிதுஉண்ண வல்லீரேல்
நீர் ஆயிரமும் நிலம்ஆயிரத்து ஆண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே
விளக்கம் :
வாசி எழுப்பி மேல் சென்று , சிரசில் கட்டி வைத்து தவம் ஆற்றில் , அதன் பயனால் அமுதம் உற்பத்தி ஆகும்
அதனால் பல்லாயிரம் ஆண்டு வாழக் கூடும்
சாதலும் இலை
உடல் தளராமல் பல காலம் நீடிக்கும்
வெங்கடேஷ்