நிதர்சனம்
ஒரு செடியில்
சிலது பூ நிலையில் இருக்கும்
சிலது காய் நிலையில்
அதுவும் பெரியது சிறியது என இருக்கும்
சிலது கனி நிலையில்
சில முற்றிலும் பழுத்தது
சில பாதி பாதி என இருக்கும்
அதே மாதிரி தான்
ஆன்மீகத்திலும் தவ பயிற்சி
யோக ஞான பயிற்சி அனுபவத்திலும்
வெவ்வேறு கட்டத்தில் இருப்பர்
அவரவர் அறிவு நிலையில் இருந்து
முழுமை பூரணத்தை கணிப்பர்
வெங்கடேஷ்