“ சன்மார்க்க சங்கத்தின் பரிணாம வளர்ச்சி “
உண்மை சம்பவம் 2022
நான் அண்மையில் அருள்ஜோதி டிவியில் ஒரு வீடியோ – சன்மார்க்க அன்பருடையது பார்த்தேன்
அவர் விழுப்புரம் அருகே – அகத்தியர்பிரியன் – மொபைல் கடை நடத்தி வருபவர்
இவர் சிங்கப்பூர் மலேசியா எல்லாம் சென்று சன்மார்க்க விளக்கங்கள் ?? வகுப்பு எடுத்து வருபவர் – சிரிப்பு தான்
இவரை பல்லாண்டுகளாக நான் அறிவேன்
சுமார் 10 ஆண்டுக்கு முன்பெலாம் , நான் கண்மணி தவம் வற்புறுத்தி பதிவு போட்டால் , அதெப்படி கண்( ஒரு உறுப்பு ) ஞானம் அடைய உதவும் என ஏளனம் செய்தவர் , இன்று கண்ணில் வர்மப் புள்ளி இருக்கு
அதை தூண்டினால் , அது pituitary pineal சுரப்பி தூண்டி விடும்
அதனால் சிரசுக்கு 12” மேலே திரியோத சாந்தம் ( சிரிப்பாக வருது – திரையோதம் தான் உண்மை உச்சரிப்பு ) அனுபவம் வரும் அங்கு அபெஜோதி தரிசனம் கிட்டும் என வீடியோ போட்டிருந்தார்
இத்தனை ஆண்டுகளாக ஒத்துக்கொள்ளாதவர் – இப்போ பாதி கிணறு தாண்டி – வர்ம புள்ளி என ஏதோ ஏதோ கூறுகிறார்
கண்ணில் விளங்கும் ரகசியம் இன்னும் தெரியவிலை
இவர் ஆயிரம் ஆராய்ச்சி கட்டுரைகள் சன்மார்க்கம் சார்ந்து எழுதியிருக்காராம் – நல்ல ஜோக்கு இலை ?
ஏனெனில் இவர் இப்போ சித்த வைத்தியம் வர்மக்கலை வைத்தியம் பார்க்கிறார்
அதனால் அதை தன் தொழிலை இதனுள் உள்புகுத்திவிட்டார்
மக்கள் எங்கே அருட்பாவில் கண்ணில் வர்ம புள்ளி என கேட்டால் , நான் அருட்பா விஷயம் உள் வாங்கி என் கருத்து அனுபவம் கூறுகிறேன் என பச்சையாக பொய் கூறுகிறார்
இவர் கூறும் விளக்கம் யாவும் சித்த வித்தை வாசி யோகம் + மன வளக்கலை மன்றம் – துவாத சாந்தம் என்பதை திரியோத சாந்தம் என தப்பாக கூறிவிட்டார்
அதுக்கு என்ன வரவேற்பு – அம்மாடி ஆஹா ஓஹோ என பாராட்டு மழை
இவர் விளக்கத்துக்கும் உண்மைக்கும் ஒளி ஆண்டுகள் தூரம்
அருள் இலை உண்மை அறிய
சன்மார்க்க சங்கம் இப்படி இருக்கு
மக்கள் சிங்கப்பூர் மலேசியா மக்கள் ஏமாந்தவர் – ஐயோ பாவம்
திருவடி ஞானம் / பயிற்சி அறியா சன்மார்க்க குருடு
வெங்கடேஷ்