திருமந்திரம் – சுழுமுனை உச்சி பெருமை
சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதிய தன்னுடல் உன்மத்த மாமே.
விளக்கம்:
உலகம் இதுக்கு கிஞ்சித்தும் தொடர்பிலா விளக்கம் அளிக்குது
( மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தி தலை உச்சிக்குச் சென்றபின் பிராகாசமான ஒளி தோன்றி அந்த ஒளிக்கதிர் உடலெங்கும் பரவி பேரின்பம் கிடைக்கும் என்று மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து தலை உச்சிக்கு நேராகக் கீழே இருக்கும் கழுத்தில் அந்த ஒளிக் கதிர் தெரியும் நிலையை அடைந்தால் அவ்வாறு தியானித்து உடல் தன்னை மறந்த நிலையில் பேரானந்தமாக இருக்கும்.)
அதனால் உலகத்தை நம்பக் கூடாது
உண்மை என்னவெனில் ??
சுழுமுனை உச்சியில் சந்திர ரேகை ஒத்த சதுர பீடத்தில் , ஆன்ம ஜோதி கண்டால் அது பர ஆனந்தம் ஆம்
அது உலக இன்பம் விட சிறந்தது – ஒப்பற்றது
அதன் மேல் நிலா மண்டபத்தில் முழு நிலா அனுபவம் – 16 கலை சந்திரன் அமைத்தால் , அதன் பயனால் அனுபவத்தால் தன்னை மறந்த இன்பம் எய்துவர்
வெங்கடேஷ்