“ வாசி பயிற்சி – வகைகள் “
1 திருவடி / மெய்ப்பொருள் வைத்து செயும் பயிற்சி
சித்தர் முறை – காக புஜண்டர் முறை எனவும் கூறலாம்
இது உலகளாவிய முறை
இந்த பயிற்சி மிக மிக எளிதானது – இரு கட்டம் தான்
பல கட்டம் இலை
ஆனால் அனுபவம் வருவது அரிது அரிது
இதில் 8*2 , சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் விளக்கம் அனுபவம் வரும்
ஞானம் , நெற்றிக்கண் திறத்தல் , சிற்றம்பலப் பிரவேசம் என எல்லாம் அடக்கம்
குயில் மயில் சர்ப்பக்கூத்து எலாம் கிடையா
வலிய வலிய ஊதுவது இலை சித்த வித்தை போல
திருவடிகள் எலாம் செயும்
தானாக ஊதுதல் நடக்கும்
அனுபவம் சித்திக்கும்
இதை கற்றுத்தர அரை மணி தான் ஆகும்
இதன் உச்ச கட்ட அனுபவங்கள் நெற்றிக்கண் திறப்பு – சிற்றம்பலப்பிரவேசம் வரை – சமாதி அல்ல
2 சீர்காழி சித்தர் மெய்ப்பொருள் வைத்து அளிக்கும் பயிற்சி
ஆயிரக்கணக்கானோர் பயின்று வருகிறார் – உள் /வெளி நாட்டிலும்
இதில் மெய்ப்பொருள் கண்ணில் சுட்டிக்காட்டப்படுவதிலை
நாமே கற்பனை செய்து பயிற்சி செய வேணும்
இவரிடம் பயின்றவர் என்னிடம் பயின்ற போது , அவர் இது எல்லாம் கூற விலை – இப்படி எலாம் கற்றுத்தரவிலை
8*2 க்கு வேற விளக்கம் அளித்தார் என கூறியிருக்கார்
இவர்க்கு வாசி சித்திக்கவிலை ஆனால் இவர் சீடர் ஒருவர்க்கு சித்தி ஆகியிருக்கு என்கிறார்
அவர்க்கு சில பல பர உதவிகள் வந்து அது நடந்திருக்கும்
அதனால் அவர் பயிற்சி மாத்தி செய்து , அதில் வெற்றி கண்டிருக்கலாம்
பல கூத்து – மயில் குயில் சர்ப்பக்கூத்து என உண்டு
பல கதிகள் உண்டு
வாலையும் மனோன்மணியும் ஒன்றென தவறான விளக்கம் அளிக்கிறார்
உச்ச கட்ட அனுபவம் தெரியவிலை
3 சித்த வித்தை – வடகரை சிவானந்தா பரமஹம்சர்
ஆயிரக்கணக்கானோர் பயின்று வருகிறார் – உள் /வெளி நாட்டிலும்
ஆனால் இந்த முறை நம் த நாட்டு சித்தர் முறைக்கு வேறுபட்டிருக்கு
அதனால் இதில் 8*2 , சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் விளக்கம் இலை , அனுபவமும் லேது
கண் வைத்து பயிற்சி இருக்கு – ஆனால் அது வேறு விதமாக இருக்கு
வலிய ஊதுகிறார்
பின் எப்படி ஞானம் அடைவது ??
கேட்டால் – பதில் இலை
இவர் உச்ச கட்ட அனுபவமாம் சமாதி – சித்தர் அடையும் ஜீவ சமாதி அன்று
வேறு ஏதோ அனுபவம்
வெங்கடேஷ்