நவீன திருவிளையாடல் – சிரிப்பு
சிவம் ( நவீன செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ) :
முட்டை வாங்கலியோ முட்டை
முட்டை வாங்கலியோ முட்டை
ஒரு பெண் :
என்னப்பா முட்டை விக்கிறது தெருவுக்கு வந்துடுச்சா ??
சிவம் :
என்ன தாயீ பண்றது – காலம் கெட்டுப்போய்டுச்சி
அதான் தெருவுக்கு வந்துடுச்சி
பெண் : சரிப்பா – முட்டை எப்படி விலை ??
சிவம் :
அது தாயீ – ஒரு லட்சத்தில் இருந்து – 5 லட்சம் வரை தாயி
பெண் : என்னப்பா இவ்ளோ விலை ??
சிவம் : இது ஆம்லெட் போடற முட்டை இலை தாயி
கரு முட்டை
பிள்ளை பெத்துக்கற முட்டை
இதன் சிறப்பு என்னன்னா :
ஓரு முட்டை மூலம் பிள்ளை பெத்தா – அது பெரிய தொழில் அதிபரா வரும்
மற்றது விளையாட்டு வீரனா வரும்
இன்னொண்ணு பெரிய விஞ்ஞானியா வரும்
அது மாதிரி விசேஷ முட்டை
அதனால் தான் இவ்ளோ விலை
உண்மை நிலை இப்படி தானே ??
இது நிதர்சனம் தானே ??
வெங்கடேஷ்