“ பத்தாம் வகுப்பு ஆசிரியரும் – பல்கலை கழக ஆசிரியரும் “
“ ஒரு குருவுக்கு வாசி வசமாகாமல் , அவர் சீடர்க்கு வசமானது “
அதனால் இந்த முறை சரியே என வாதிடுகிறார்
இதன் பொருள் :
அந்த மாணவர்க்கு வேறு ஏதோ உயர் நிலை குரு ஆசான் வந்து , நேரிலோ – சூக்குமத்திலோ வந்து பாதை காட்டியிருப்பார்
அதனால் அவர்க்கு வாசி சித்தி ஆனது
இதை சுலபமா புரிய வைக்கவா ??
பத்தாம் வகுப்பு ஆசிரியரும் – பல்கலை ஆசிரியரும் ஒன்றல்ல
அது தான் இங்கே நடந்துளது
பல்கலை ஆசிரியர் வந்து பாதை மாத்திவிட்டிருக்கார்
அதனால் வாசி வெற்றி ஆனது
இது அனுபவமாக சிலர் வாழ்வில் நடந்துளது
இதை நிரூபிக்கும் உண்மை சம்பவம்
என் மாமா
மதுரையில் பொற்கொல்லர்
மதுரையில் சில யோகா பயிற்சி எடுத்தார் – மெய்ப்பொருள் – திருவடி
அனுபவம் வரவிலை
அதனால் அனைத்தையும் விட்டுவிட்டு , தானே ஆய்ந்து கண்டுபிடித்தார்
ஆனாலும் தவம் எப்படி செய்வதென தெரியாமல் இப்படி அப்படி என காலம் சென்றது
பின் ஒரு நாள் , தவம் செய்து கொண்டிருந்த போது , சூக்குமத்தில் ஒருவர் வந்து ,
1 தவம் இப்படி செய வேணும்
2 நெற்றிக்கண் திறக்கும் ரகசியம் – பாதை தெரிவித்துவிட்டு சென்றாராம்
அவர் உருவம் / குரல் இலை
ஆனால் கற்றுத் தந்துவிட்டார்
அது தான் அவர் மகிமை
அன்றிலிருந்து அவர் கூறியபடி தான் தவம் செய்து வந்த தாகவும் , அதனால் நல்ல அனுபவம் சித்தித்ததாக கூறினார்
1 உடலில் நறுமணம் வீசுமாம்
2 மணி நாதம் கேட்டாராம்
3 வினைகள் தீர்த்துவிடுவராம்
4 பெரிய பெரிய சித்தர் பெருமக்கள் காட்சி கொடுத்து பேசியுள்ளனராம்
5 மனம் அடக்கம் இருக்குமாம்
6 அசைவு ஒழித்து இருப்பாராம் தவத்தில்
இன்னும் பலப் பல மேலான அனுபவம் வந்ததாகக் கூறினார்
அது தான் பத்தாம் வகுப்பு ஆசிரியரும் பல்கலை ஆசிரியர் வேற வேற
இருவரும் ஒரே பயிற்சி விளக்கம் அளிக்க மாட்டார்
மக்களுக்கு புரிந்தால் சரி
வெங்கடேஷ்