“ வீட்டு சாப்பாடும் ஓட்டல் சாப்பாடும் 3 “
வீட்டில் சமைத்து சாப்பாடு போட்டால்
வெளியே சென்று ஏன் சாப்பிடுகிறார் ??
இவருக்கும் சாப்பாடு செயத் தெரியாது
வெளியே போய் சாப்பிட்டாலும் ஏளனம் இழிவு படுத்துவார்
அங்கே பயிற்சி உபதேசம் அளித்தால்
அன்பர் ஏன் வெளியே மத்த மார்க்கம் சென்று பயில்கிறார் ??
அங்கே வெறும் வேதம் ஓதச் சொன்னதன் விளைவு தான் இது
கோபப்பட்டு என் பயன் ??
தம் அன்பர் வேறு ஆசிரியரிடம் கற்றால்
அந்த ஆசிரியர் நரர் ஆம்
கற்றுக்கொடுக்க தகுதி தரம் இலையாம்
இவர் கற்றுத் தந்தால் ??
இவர் எப்போது தேவன் ஆகி
ஒளி தேகம் பெற்றார் என தெரியவிலை
சில குழுக்களில் நகைச்சுவைக்கு பஞ்சமிலை
வாய்க்கு பஞ்சமிலை
வெறும் வாய்ப் பந்தல் தான்
வெங்கடேஷ்