“ சுழுமுனை உச்சி பெருமை – புராணம் பெருமை “
சிவவாக்கியர்
ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்க லாகுமோ
கோடுகாட்டி “ யானையைக் கொன்றுரித்த கொற்றவா “
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.
விளக்கம் :
புராணம் :
வழுவூர்
அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்று, வழுவூர்.
அட்ட வீரட்டங்களில் யானையாக வந்த கஜாசுரனை அழித்த தலம் இது. யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்தி, அதன் மத்தகத்தின் மீது நின்று இடது உள்ளங்கால் தெரியும் வண்ணம் ஊர்த்துவ தாண்டவம் ஆடுகிறார் பெருமான். இது நவதாண்டவங்களில் ஒன்றாகக் கூறப்படுகின்றது. நடன சபைகளில் ஞானசபையாகப் போற்றப்பெற்றுள்ளது
சித்தர் பெருமான் என்ன கூற வருகிறார் எனில் ??
இங்கு யானை என்பது மிருகம் அல்ல
கருப்பு நிறமுடை இருள் – விஷம்
சுத்த சிவம் உச்சியில் இருந்த இருளை விழுங்கி , தனக்கு தன் இடம் காட்டி இருக்க வைத்த அனுபவம் தான் பாடல் ஆக பாடுகிறார்
வீடு – உச்சி , இருதயக் கமலத்தில் – துவாத சாந்தப் பெரு வெளி
தனக்கு சுய தரிசனம் அளித்த அனுபவம் இங்கு உரைக்கின்றார்
புராணம் எல்லாம் பொய் – கதை அல்ல . தன்னுளே மகத்தான சாதனா ரகசியம் அடக்கி வைத்துளது என்பது உண்மை
வெங்கடேஷ்