“ திருவாசகம் – பிடித்த பத்து – ஒளி தேகம் அருமை பெருமை “
பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்போடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற்சோதி
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
விளக்கம் :
இந்த அருட்பாடலில் சுத்த சிவம் தனக்கு என்னென்ன அருள் காரியம் செய்தது என பாடுகிறார் மாணிக்க வாசகப் பெருமான்
ஆகாய கங்கை ஊறச்செய்து உடல் எல்லாம் பரப்ப செய்து , அதன் மூலம் உடல் – எலும்பு எல்லாம் உருக்கி – என்னை சதா நித்யா ஆனந்தத்தில் திளைக்க செய்தும் , எல்லா துன்பமும் ஒழித்தும் , பிறப்பிறப்பு அறுத்த சிவமே உனை நான் சிக்கென பிடித்தேன்
ஆகையால் ஒளி தேகத்துக்கு முன்னோடி இவர் தான்
பின்னர் மத்தவர் எல்லாம் என அறிதல் அவசியம்
வெங்கடேஷ்