“ தேனீ – ஈ “
தேனீ தேன் மட்டுமே உண்ணும்
ஈ எல்லாவற்றையும் – மலத்திலும் அமரும்
ஞானியர் தேனீ மாதிரி – கண் எப்போதும் மேல்
சாமானியர் ஈ மாதிரி – கண் உலகம் நோக்கி
தவம் ஆற்றுவோர் தேனீ
தவம் ஆற்றாது சடங்கில் நிற்போர் ஈ
எல்லா முறையிலும் மார்க்கத்திலும் சன்மர்க்கம் உட்பட
தேனீ ஈயிடம்
மலம் விட தேன் சிறந்தது என எத்தனை முறை விளக்கினாலும்
அதுக்கு விளங்குவதிலை , ஏற்றுக்கொள்வதிலை
சடங்கில் நிற்போர் ஈ மாதிரி
தவம் நிட்டை ஏதுமிலை
அன்னதானம் தயவு என வாய்மொழி மட்டும்
வாசி உருவாக்காமலே தலைப்பாகை அணிதல்
அருள் பெறாமலே அருள்நிதி பட்டம் சூட்டிக்கொள்ளுதல்
தயவுக்கு ஏறாமலே தயவு என பேர் வைத்துக்கொளல்
உலகம் எலாம் சடங்கு மயம் தான்
வெங்கடேஷ்