“ பர வாழ்வு – ஞான வாழ்வு – ஞான யாத்திரை – சன்மார்க்க விளக்கம் “
நாம் சாதுக்கள் ?? தவசிகள்?? திருவண்ணாமலை – கிரி வலப்பாதையில் வாழ்வதைக் கண்டிருப்போம்
பல ஆன்மீக மலைகளில் சதுரகிரி என அங்கும் வாழ்ந்து வருவர்
இதெலாம் புற வெளிப்பாடு தான்
அகத்தில்
பிரணவத்தில் அமையப்பெற்றிருக்கும் இருதயக் குகை திறந்தும் , பிரமப்புழை திறந்து , அங்கு வாழும் வாழ்க்கை தான் உண்மையான “ பர வாழ்வு – ஞான வாழ்வு “ ஆம்
இந்த வாழ்வு வாழ மேற்கொள்ளும் முயற்சி தவம் தான் “ ஞான யாத்திரை “
இப்படி பார்த்தால் ஒருவரும் இந்த விளக்கத்துக்கு அருகே வரமாட்டார்
எல்லாம் சடங்கு , வேஷம் தான்
இது கோடியில் ஒருவர்க்குத் தான்
விரல் விட்டு எண்ணக்கூடியவரே உண்மையாக இருப்பர்
வெங்கடேஷ்