“ சாலை – சாலை அப்பன் – சாலை ஆண்டவர் – சன்மார்க்க விளக்கம் 2 “
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
117. ஞான மருந்து
மேலை வெளியா மருந்து – நான்
வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து
“ சாலை விளக்கு மருந்து “ – சுத்த
சமரச சன்மார்க்க சங்க மருந்து
விளக்கம் :
பரவிந்து கலை சாலை ஆகிய சுழிமுனை நாடி வெளிச்சம் போட்டுக் காட்டும் வல்லமை உடைத்து
சாலையப்பனை வேண்டல்
கொச்சகக் கலிப்பா
- 7. வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர்
சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை
மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச்
சாலை அப்பா எனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே.
விளக்கம் :
இங்கு குறிக்கப்பெறும் சாலை சென்னை அண்ணா சாலை , வண்ணை தங்க சாலை அல்ல
அது சு நாடி ஆகும்
“ சாலை அப்பனாகிய ஆன்மா “ என பாடுகிறார்
இதனால் சாலை ஆண்டவர் என்பதும் ஆன்மாவைத் தான் குறிக்கும்
மக்களுக்கு பரந்த அறிவு வேணும் – எல்லாம் ஒன்றே என சமரச அறிவு வேண்டும்
வெங்கடேஷ்