“ திருமந்திரம் – வீரட்டம் – புராணம் பெருமை “
கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றான
விளக்கம் :
உலக மக்கள் மெய்ஞ்ஞான கருத்துக்கள் விளக்கங்களின் உண்மை பொருளை அறியாது உணராது இருக்கார் என தேவர் சிவத்திடம் வேண்ட ,
சிவமும் அந்த இருளை தன் சோமசூரியாக்கினிகலைகள் சங்கமமாகிய சூலம் கொண்டு அழித்தான் என அந்தகாசுரன் புராணம் உரைக்குது இந்த மந்திரம்
அந்தகன் – குருடன் – உண்மை பொருள் விளங்காது இருக்கும் குருட்டுத்தன்மை – குருட்டுக்குணம்
வெங்கடேஷ்