திருமந்திரம் – தவம் பெருமை – வேடதாரிகள்
சன்மார்க்க அன்பர் நிலை
ஆற்றில் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.
விளக்கம் :
ஒருவன் ஆற்றை கடக்க முயல , அங்கிருக்கும் முதலைக்கு பயந்து ஒட , கரடி கையில் அகப்பட்ட மாதிரி
ஒழுக்கம் தவம் பயிற்சி அனுபவம் என இல்லாமல் – அதுக்கான வழியில் நிற்காது அதன் வேடத்தில் நிற்பது மாதிரி
வேடம் எனில் ஏமாற்றி பிழைத்தல் , உலக வாழ்க்கைக்காக அதன் சொகுசு ஆடம்பரம் சுகத்துக்காக ஞானி யோகி வேடம் தரித்து ஏமாற்றல்
சன்மார்க்க அன்பர்க்கு இந்த மந்திரம் எப்படி பொருந்தும் எனில் ??
தவம் செய்யாமல் அதன் ஒழுக்கம் நில்லாமல் வெறும் சடங்கில் அன்னதானம் ஜீவகாருண்ணியம் உயிர் இரக்கம் என நிற்றல் தான்
தவத்துக்கு அஞ்சி அன்னதானம் ஜீவகாருண்ணியம் பின் ஒளிந்து கொள்ளல் மாதிரி
வெறும் வேடமாக வெள்ளை ஆடை – தலை முண்டாசு அணிதல்
வெங்கடேஷ்