“ ஞானியர் கருத்து ஒற்றுமைப்பாடு “

 “ ஞானியர் கருத்து ஒற்றுமைப்பாடு “

1 திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிய திருக்கற்குடி திருத்தாண்டகம்

மண்ணதனில் ஐந்தை

       மாநீரில் நான்கை

  வயங்கெரியில் மூன்றை

       மாருதத்தி ரண்டை

விண்ணதனில் ஒன்றை

       விரிகதிரைத்

  தண்மதியைத் தாரகைகள்

       தம்மின் மிக்க

2 மாணிக்க வாசகர் – திருவாசகம்  :

போற்றி அகவல்

“பாரிடை ஐந்தாய்” பரந்தாய்ப் போற்றி
” நீரிடை நான்காய் ” நிகழ்ந்தாய்ப் போற்றி
” தீயிடை மூன்றாய்” திகழ்ந்தாய்ப் போற்றி
” வளியிடை இரண்டாய்” மகிழ்ந்தாய்ப் போற்றி
” வெளியிடை ஒன்றாய்” விளைந்தாய்ப் போற்றி

இந்த இரு பதிகமும் ஒரே கருத்தை தான் பாடுகின்றது

இறைவன் எப்படி 5 பூதங்கள் வடிவாக நம்முடலில் கலந்து இருக்கின்றான் என்பதை இப்பாடல் விளக்குகின்றது

“பாரிடை ஐந்தாய்” = மண் – 5 பாகங்களாக – மெய் , வாய், கண் , மூக்கு , செவி ஆகிய பாகங்களாக

” நீரிடை நான்காய் ” = நீர் = 4 பாகங்கள் – கண்ணீர் , சிறு நீர் , ரத்தம் , அமுதம் ஆகிய பாகங்களாக

” தீயிடை மூன்றாய்” = 3 பாகங்கள் – சூரியன் – சந்திரன் – அக்கினி ஆகிய பாகங்களாக

” வளியிடை இரண்டாய்” = 2 பாகங்கள் – பிராணன் – அபானன் ஆகிய பாகங்களாக

” வெளியிடை ஒன்றாய்” = 1 பாகம் – சிதாகாஸப் பெருவெளியாக

இவ்வாறெல்லாம் இறைவன் நம்முடலில் கலந்து அருள் செய்த வண்ணம் உள்ளான்

ஞானியர் மத்தியில் கருத்து ஒற்றுமை தான் இருக்கும்

வேற்றுமை இருக்கவே இருக்காது

வெங்கடேஷ்

Leave a comment