“ திருமந்திரம் – மௌனம்/ஆன்மா பெருமை “
“ திருமந்திரம் – மௌனம்/ஆன்மா பெருமை “ வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரேஆக்கும் அச் சுத்த்ததை யார்அறி வார்களே 1896 விளக்கம் : வாக்கும் மௌனமும் தன் இயல்பான பணி செய்யாதிருத்தல் மௌனமாம் அந்த அனுபவம் உதித்தால் அவன் ஊமை போல இருப்பான் அந்த அனுபவம் சுத்த அனுபவம் அவர் சுத்தர் புனிதர் கருவி கரணங்கள் தத்துவ சேர்க்கை இல்லாதிருப்பதால் சுத்தம் இந்த உயர்ந்த சுத்தானுபவத்தை யாரே அறிவார்…