“தகுதியும் திறமையும் “
ஒரு ரயில் தண்டவாளமும் பயணியர் பெட்டியும்
இவ்வளவு வேகம் தான் ஓட்ட முடியும் என வரையறுக்கப்பட்டுளது
அதுக்கு மேல் தாங்காது
Fit to run at 100 /130 km per hr என எழுதி இருக்கும்
புல்லட் ரயிலை நம் தண்டவாளத்தில் ஓட்ட முடியாது
அதே மாதிரி
ஒவ்வொரு உயிரும்
அதன் வினை பக்குவம் அருள் தவத்துக்கேற்ப
தன்னை அறியும் பிரம்ம வித்தையில்
ஆய்வு பயிற்சி அனுபவம் அருள் கிடைக்கும்
ஒவ்வொரு பிறவியிலும்
படிகள் மேலேற்றி கடக்க வைப்பர்
தான் பிறந்த இடத்துக்கு மீண்டும் போய் சேர
பலப்பல பிறவிகள் ஆகிவிடுது
வெங்கடேஷ்

