“ முப்பூ – பிரணவம் பெருமை “
“ சுசீந்திரம் ஊர் பெருமை சிறப்பு “
இந்த ஊர் கோவில் நாகர் கோவிலுக்கும் குமரிக்கும் இடையே இருக்கு
இங்கு எழுந்தருளி இருக்கும் சுவாமி பேர் – “ தாணுமாலயன் “
எனில் ??
சிவன் – விஷ்ணு – பிரமன் கலந்த மும்மூர்த்திகள்
கோவில் வரலாறு : புராணம்
இந்திரன் அகலிகை மீது கொண்ட மோகத்தால் அடைந்த சாபத்துக்கு விமோசனம் பெற்ற ஸ்தலம்
கௌதம ரிஷி அளித்த சாபத்துக்கு விமோசனம் கிடைத்த இடம்
எப்படி கிடைத்தது ??
இந்திரன் இந்த புனித ஸ்தலத்தில் தவம் செய , அங்கே ஒரு மரத்தில் மும்மூர்த்திகளும் ஒன்று சேர்த்து காட்சி கொடுத்து , அவர்க்கு சாப விமோசனம் அளித்ததாக புராணம் கூறுது
இதன் உட்பொருள் :
தவத்தில் சோமசூரியாக்கினியின் சூக்கும ஒளி – கலைகள் ஒன்று சேர்ந்தால்
அது பாவத்தை நாசம் செயும் என்பது தான்
சோமசூரியாக்கினி கலைகள் = சிவம் விஷ்ணு பிரம்மா ஆவர்
ஒரு உயரிய கருத்தை உலகத்துக்கு புரிய வைக்க , நிறைய புராணம் தேவைப்படுது
அனேக கதைகள் வேண்டியதாகுது ( எலாம் கற்பனை தான் )
ஆனாலும் உலகம் உண்மைக்கு அருகே கூட இலை
முப்பூ என்பது சோமசூரியாக்கினி கலைகள்
முப்பூ என்பது மும்மூர்த்தியர்
முப்பூ தான் முக்கூடல் திரிகோண மலை எல்லாம்
அதில் இருந்து இறங்கும் “ நதி தான் பாபநாசம் “
இது போதுமா ??
இன்னும் வேணுமா ??
வெங்கடேஷ்