“ ஆற்காடு –  இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு “

“ ஆற்காடு –  இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு “ இந்த ஊர் சென்னை/ காஞ்சி அருகே இருக்கு ஆற்காடு = ஆல் + காடு விஷமாகிய இருள் மும்மலம் உள்ள காடு ஆகிய உச்சி குறிக்க வந்த ஒரு இடம் ஒரே இடத்தை எவ்வளவு உவமானம் செய்து காண்பித்துள்ளார் நம் முன்னோர்  ?? தில்லை வனமும்  ஆற்காடும் ஒன்று தான் வெங்கடேஷ்

“ உண்மையான ஆன்ம சாதகனின் விண்ணப்பம் “

“ உண்மையான ஆன்ம சாதகனின் விண்ணப்பம் “ என்னவாக இருக்கும் ?? தெய்வமே பூஜை அறை கதவு  திறந்தால் எப்படி நறுமணம் – கற்பூரம் விபூதி சந்தனம் மலர்கள் வீசுவது போல் “ மணி நாசி அடைப்பதனை திறந்து கற்பூர மணம் நான்  முகர  வேணும் ஆன்ம அனுபவம் பெற வேணும் “   இது தவிர வேறென்ன இருக்க முடியும்?? வெங்கடேஷ்

“ ஒளி தேக சித்தி “

“ ஒளி தேக சித்தி “ எப்படி நடக்கும் எனில் ?? அரசு ஊழியர்க்கு சம்பள  உயர்வு பல மாத / ஆண்டுகள்  பாக்கி ( ஊதிய ஒப்பந்த நிலுவை ) ஒன்றாக சேர்ந்து ஒரே மாதத்தில் கிடைப்பது போல் தான் ஒரு ஆன்ம சாதகன் பலப்பல பிறவிகளில் செய்த தவப் பயன் புண்ணியம் சிவப்புண்ணியம் தான தர்மம் எல்லாம் சேர்ந்து ஒரே பிறவியில் அடுக்கும் போது ஒளி தேகமாம் முத்தேக சித்தி கைகூடும் ஆகையால் அதுக்கு…