காகபுஜண்டர் 1000
தீத்தீதீ என்று சொன்னாற் சுடாதுதீயே
தீயாகுஞ் சொல்பிறந்தால் யோகமென்றால்
தீத்தீதீ யோகத்தீ மூலத்தீயே
செந்தீயோ என்றாலே பஞ்சதீயே
தீத்தீதீ உள்ளத்தீ மூலத்தீயும்
சேர்ந்துவிட ஆறாகும் யோகத்தீயே
தீத்தீதீ சுட்டுவிடும் உடலாங்காட்டை
*திருவருளே லெகுவாகும் யோகத்தாட்டே.
விளக்கம் :
தீ தீ என கூறினால் சுடாது
தீ என்றால் அது யோகமுறையில் பல தீ உள
மூலத்து எழும் தீ தான் மூலாக்கினி
செம்மையான தீ ஆகும் பஞ்சேந்திரிய ஒளிகளாம்
இவைகள் ஒன்று சேர்ந்தால் ஆறாகும் யோகத்தீ
இவைகள் உடல் இயக்கும் 36 தத்துவங்களை எரித்துவிடும்
ஆகையால் யோகத்தே நிற்பாயாக என்கிறார் சித்தர்
வெங்கடேஷ்