“ எண்ணம் பெருமை “
அருட்பா – 6 ம் திருமுறை – சுத்த சிவநிலை
சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள்
சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே – நித்தியம்என்
றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்
நண்ணுமின்பத் தேன்என்று நான்
பொருள் :
” எல்லாம் வல்ல சிவம் ஒன்றே – அது நித்யம் என்ற ஏக எண்ணத்தாலேயே நாம் நினைத்தது எலாம் ஈடேறும் – கைகூடும்
இது சத்யம் என்கிறார் வள்ளல் பெருமான்
2 எல்லாம் சிவமே ஆற்றுது
எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்
இந்த எண்ணத்தால் மனம் உடல் லேசாகிவிடும்
இதெல்லாம் எண்ணத்தின் பெருமை
வெங்கடேஷ்